வவுனியா நெளுக்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை அழகாக மாற்றிய இளைஞர்கள்!!

301

வவுனியா நெளுக்குளம் சந்தியில் காணப்பட்ட பேரூந்து தரிப்பிடம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பயணிகளின் பாவணைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்டது.

இதனையடுத்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பேரூந்து தரிப்பிடம் அழகாக மாற்றப்பட்டுள்ளது.

இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.