வவுனியா புனித பேதுரு ஆலயத்தில் இன்னிசை ஆராதனை!!

363

வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் அமைந்துள்ள புனித பேதுரு ஆலயத்தில் காலை இன்னிசை ஆராதனை (கரோல் கீதம்) இடம்பெற்றது.

கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு ஆலய தந்தை ரேபரன் கேனடி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கித்துள் வீதியிலிருந்து நந்தார் தாத்தாவுடன் பெண்கள் பவணியாக,

ஆலயத்தினை வந்தடைந்து ஆலயத்தில் இன்னிசை ஆராதனை இடம்பெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

இதன் போது இறை செய்தியினை ஒ எம் ஜ தந்தை போல்நட்சத்திரம் அவர்கள் வழங்கியிருந்தார். இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.