
வவுனியா வெங்கல செட்டிக்குளம், பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தைத்திருநாள் விழா நேற்று முன்தினம் வீரபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொங்கல் நிகழ்வும் வழிபாடுகளும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முட்டி உடைத்தல் கிளித்தட்டு முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்களும், கலை நிகழ்வுகள் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வீரபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு அருட்திரு யோகசிகாமணி குருக்கள், வெங்கல செட்டிகுளம் பிரதேச சபைத் தவிசாளர் ஆ.அந்தோனி, மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ஜெ.தட்சாயினி,
கிராம அலுவலர்களான பா.பாலஶ்ரீ, எஸ்.கஜேந்திரன், இ.தேவகி, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு மற்றும் இந்து ஆலய ஒன்றிய உறுப்பினர்கள், கலாசார பேரவை உறுப்பினர்கள், அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.