வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

342

ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் நகரசபையின் உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நினைவுத் தூபிக்கான மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழருவி சிவகுமார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றிருந்தது.