வவுனியாவில் வறிய மாணவர்களுக்கு துயரம் பவுண்டேசன் உதவி!!

335

வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தர்மலிங்கம் சுஜீவன் தலைமையில் செயற்பட்டு வரும் துயரம் பவுண்டேசன் தனது செயற்பாடாக வவுனியா அண்ணாநகர் அ.த.க பாடசாலையில் தமது கற்றல் நடவடிக்கைககளை தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கான உதவிகளை நேற்று (12.02.2020) வழங்கியிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும், 05மாணவர்களுக்கு புத்தகப் பைகளையும், புலமைப் பரிசில் மாணவர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியயையும், பாடசாலைக்கு 1000 லீற்றர் கொள்ளளவுடைய தண்ணீர் தாங்கி ஒன்றையும் வழங்கியிருந்தது.

இந்நிழ்வில் வவுனியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் பங்குபற்றி இருந்ததோடு போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வொன்றையும் மாணவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.