‘ஆண்டவன் நல்லவர்களை அதிகம் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் கெட்டவர்களுக்கு அதிகமாக அள்ளி வழங்குவார் ஆனால் கைவிட்டு விடுவார்’ இந்த வசனங்களெல்லாம் வெறும் வார்த்தைகளா என சிந்திக்க தோனுகிறது.
இந்தியாவில் சாதனைப்படைத்த அந்த மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.தலையில் பூச்சூட வேண்டியவள் அன்றைய தினம் உடல் முழுவதிலும் பூக்கள் சூட்டப்பட்டிருந்தாள்.
நண்பர்கள் மீதும் தனது வகுப்பாசியர் மீதும் அளப்பரிய பிரியம் கொண்டவள், அதனைவிட கல்வியில் அவதானம் செலுத்துவதில் வேள்வி புரிந்தவள் என்றே சொல்ல வேண்டும், ஆனால் அவளுக்கு ஆண்டவன் குறைவைத்தது உடம்பில் ஆயிற்றே….
அவள்தான் கோயம்பத்தூர் சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி…எலும்பு வளர்ச்சி குறைப்பாட்டால், உடல்ரீதியாக முடக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட ப்ரீத்தி கொண்டிருந்த நம்பிக்கை அசாதாரணமானது…!
அவள் எவ்வளவு கனவுகளைச் சுமந்துகொண்டிருந்தாள்… படிப்பையும், ஆசிரியர்களையும் எந்த அளவுக்கு அவள் காதலித்தாள்… ப்ரீத்தியின் நினைவுகள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சம் கணக்கும் வலிகள்.
16 வயதுடைய பரீத்திக்கு எழுந்து நிற்க முடியாது.நடைபழகாத குழந்தை மாணவியாவாள். ஆனால், தன் குறைபாடு குறித்த எந்தவிதக் கவலையும் அவளுக்கு இருக்கவில்லை.
படிப்பு… படிப்பு… அதுமட்டும்தான் அவள் மனசுக்குள் நிறைந்திருந்தது.பள்ளியைவிட்டுச் செல்வது அவளுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது.எப்போதும் பள்ளியிலேயே இருந்துவிடமாட்டோமா என்ற தவிப்பின் குமுரல்களை தனது கண்ணீரின் மூலம் அவ்வப்போது வெளிக்கொணர்வாள்.
மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவள் கனவு.பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் வாங்கி அசத்தியிருந்த அவளுக்கு 11-ம் வகுப்பு சேர்வதிலேயே பிரச்சினை காணப்பட்டுள்ளது.
படம் வரைய வேண்டிய அறிவியல், கணிதப் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு அவளது ஊனம் தடையாக இருந்தது.கலைபிரிவுதான (ஆர்ட்ஸ் குரூப்தான்) படிக்க முடியும் என்ற நிலை.அவளது துரதிர்ஷ்டவசம்.
அவள் படித்த பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் இல்லை.பல கிலோ மீட்டர்கள் தாண்டி வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்பதும் ஆகாத காரியம்.காரணம், அவளது உடல்நிலை!பத்தாவதுவரை ப்ரீத்தியை அவளது அம்மா புவனேஸ்வரிதான் தினமும் பள்ளிக்குத் தூக்கிக் செல்வாள்.
சிறுநீர் கழிப்பதற்குக்கூட யாரேனும் தூக்கிப்போகவேண்டும் என்பதால் பள்ளி முடியும் வரை அங்கேயே காத்திருந்து தன் மகளைத் தாங்கி வந்து பொக்கிசமாய் வளர்த்து வந்தாள்.
ப்ரீத்தியும் புவனேஸ்வரியும் பயந்தார்கள்.தலைமையாசிரியர் சரவணனிடம் போய் பேசினார்கள்.
ப்ரீத்தி நல்லா படிக்கிற பொண்ணு அவளை நாங்க விட்ற மாட்டோம்’ என்று நம்பிக்கையோடு சொன்ன சரவணன், சி.இ.ஓ-விடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி ப்ரீத்திக்காக பிசினஸ் மேத்ஸ் பாடப்பிரிவை கடைசி நேரத்தில் கற்க சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுத்தார்..
ப்ரீத்தி… ப்ரீத்தியின் அம்மா புவனேஸ்வரி… தலைமை ஆசிரியர் சரவணன் மூன்றுபேரும் தமிழக அளவில் பேசுபொருளானார்கள்.
11 ஆம் ஆண்டு கல்வியை தொடர்ந்து ப்ரீத்தி அம்மாவின் முழு நேர அவதானிப்புடனும் ஆனந்தத்துடன் தேர்விற்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்தாள்.
அந்த சமயமே பரீத்திக்கு மற்றுமொரு சோதனை ஏற்பட்டது.தனது உடற் குறைப்பாடுகளை சற்றுமே பொருட்படுத்தாத ப்ரீத்தி அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்வோம் என தனது தாயிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றாள்.
தேர்வெழுதிய பின்னர் விடுமுறையில் வீட்டில் இருந்த தருணம் அதுவாகும்.அம்மா உடம்பு வலிக்குது அம்மா டாக்கிட்டர் கிட்ட அழைச்சிட்டு போவியா… என்றுமே அவள் வைத்தியசாலைக்கு செல்ல விரும்பியதில்லை.ஆனால் அன்று தன் தாயிடம் தயவான கோரிக்கையை முன்வைக்கின்றாள்
பதறிய தாய் புவனேஷ்வரின வைத்தியசாலைக்கு தாங்கி செல்கின்றாள்… வைத்தியர்களிடம் தெரிவிக்கின்றாள்…. தனது மகள் தொடர்பில் கதறுகிறாள்.
அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறிய மூச்சு தினறல் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்து சில மணித்தியாலங்களின் பின்னர் வைத்தியர்கள் குழாம் ஒன்று ப்ரீத்தியின் உறவுகள் நோக்கி வருகின்றது.
ப்ரீதிக்கு எலும்புகளை கட்டுபடுத்துவதற்கும் வளர்ச்சிக்குமான அனைத்து சக்திகளும் முழுமையாக நின்று விட்டது அவளை காப்பாற்ற முடியாதென்று.
வைத்தியர் குழுவின் வசனங்களை செவி மடுத்து கிரகிப்பதற்கு முன்னர் நிலத்தில் மயங்கி சாய்ந்தாள் தாய்…..நிரந்தரமாக இவ்வுலகை விட்டு பிரித்தாள் பரீத்தி.
தேர்தல் பெறுபேறுகளையேனும் பார்க்காமல் இவ்வுலகம் விட்டுசென்ற ப்ரீத்தியின் ஆத்ம சாந்திக்கு இவ்வுலகமே பிரார்த்திக்கின்றது.. நாமும் பிரார்த்திப்போம்.
இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.