விஜய் படங்களை பார்க்கவும் மாட்டேன்,பேசவும் மாட்டேன்…!விஜய் செய்தது தப்பு தான் : நெப்போலியன்….!

402

நெப்போலியன்….

தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடித்திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் வெளியாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.

இந்நிலையில் தனியார் இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நெப்போலியனிடம் போக்கிரி படத்தில் விஜய்க்கும் உங்களுக்குமிடையே என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. 13 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். அதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நடந்த சம்பவம் உண்மை தான்.

போக்கிரி படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் அவரும் நானும் ஒன்றாக நடித்தோம்.ஷாட் முடிந்து வெளியே வரும் போது நடந்த சம்பவம் அது. அதை விரிவாக சொல்ல விரும்பவில்லை. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது. என் வாழ்க்கையில் அப்படி யாரும் என்னிடம் பேசியதில்லை. நடந்து கொண்டதில்லை. எந்த சூழ்நிலையில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.