விடிந்தால் தங்கைக்கு திருமணம்..

தங்கையின் திருமணம் நடைபெறவிருந்த வேளையில் திடீரென அண்ணன் உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த விவசாயி சண்முகம்-செல்லத்தாயி தம்பதியினருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் நேற்று கடைசி மகள் மீனாவுக்கும், அவர்களுடைய உறவினரின் பையன், குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்றைக்கு முன்தினம் இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்ததால் மீனாவின் சகோதரன் தனபால் (29), சமையல் உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு இயற்கை உபாதையினை கழிப்பதற்காக தனபால், வயல்பகுதியில் இருள்சூழ்ந்த பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் ச ந்தேகமடைந்த அவருடைய தந்தை தேடிச்சென்றுள்ளார்.

அப்போது தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தனபால் தவறி கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு தனபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தனபால் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேள்விப்பட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணம் வேறு திகதிக்கு மாற்றப்பட்டது.