விநாயகர் சிலை பந்தலில் சிறுமி துஸ்பிரயோகம்!!

594

துஸ்பிரயோகம்

இந்தியாவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில், 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகர் எனும் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 13 வயது சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் சென்றுள்ளார்.

அங்கு, விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு பந்தலின் மீது வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 24 வயது பந்தல் ஒப்பந்ததார இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியிடம் பேசி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர், விநாயகர் சதுர்த்திக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் பின்னால் சிறுமியை அழைத்துச் சென்று அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக இதுதொடர்பாக பொலிசில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.