விமான பயணத்தில் மரணமடைந்த இளம்பெண்… ஏற்கெனவே மரணத்தை வென்றவள் : தாயார் உருக்கம்!!

568

இளம்பெண்

சான்விச் ஒவ்வாமையால் பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய இளம்பெண்ணை மரணம் இரண்டாவது முறையாக அழைத்து சென்றுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொழிலதிபரின் மகளான 15 வயது Natasha Ednan-Laperouse தமது நெருங்கிய தோழி மற்றும் தந்தையுடன் பிரான்சின் நைஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த நிலையில் விமானத்தில் வைத்து தாம் வாங்கிச் சென்ற எள் விதைகள் சேர்க்கப்பட்ட சான்விச் ஒன்றை சாப்பிட்டுள்ளார். இது அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அவரது குடியிருப்பில் இருந்து சுமார் 800 மைல்கள் தொலைவில் இருக்கும் Cote d’Azur நகரில் வைத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நடாஷாவின் மொத்த குடும்பத்தையும் கடுமையாக உலுக்கியுள்ள நிலையில், தமது மகளை எவ்வாறு இதுபோன்ற சிக்கலில் இருந்து இதுவரை காத்து வந்தது தொடர்பில் நடாஷாவின் தாயார் மனம் திறந்துள்ளார்.

ஒவ்வாமை அவர்களது குடும்ப வியாதியாக இருந்தாலும் முட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களின் வாசம் அல்லது பயன்பாடு நடாஷாவுக்கு எக்ஸிமா என்ற நோய் பாதிப்பை அளித்துள்ளது.

நடாஷா 6 மாத குழந்தையாக இருக்கும்போது வாழைப்பழம் ஒன்றை சுவைத்த நிலையில் முதன் முறையாக அவருக்கு ஒவ்வாமை இருப்பது குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

சம்பவத்தன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த அவரை மருத்துவர்கள் போராடி மீட்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடாஷா ஒரு போராளியாகவே இதுவரையான காலகட்டத்தில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 மாதம் இருக்கும்போது பால் வடிவத்தில் அடுத்த சோதனை நடாஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. அப்போதும் அந்த முயறிசியில் இருந்து நடாஷா மீண்டு வந்துள்ளார்.

பால் பொருட்களின் துகள்கள் காற்றில் கலந்திருந்தாலே அது நடாஷாவுக்கு ஒவ்வாமையை அளித்தது. மட்டுமின்றி நடாஷா குடும்பத்தினர் வெளியே எங்கு சுற்றுலா சென்றாலும், சொந்தமாக தயாரித்த உணவுகளையே எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த ஜூலை 17, 2016 ஆம் ஆண்டு காலை 9.50 மணியளவில் நடாஷா சான்விச் ஒன்றை வாங்கி விமானத்தில் வைத்து சாப்பிட்டுள்ளார்.

10.50 மணியளவில் ஒவ்வாமை காரணமாக விமானத்திலேயே நடாஷா சுருண்டு விழுகின்றார். அடுத்த 50 நிமிடங்களில் நடாஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நைஸ் நகர மருத்துவனையில் சேர்ப்பிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 8 மணியளவில் நடாஷா மரணமடைந்த தகவல் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுகிறது.

15 ஆண்டு காலம் பல முறை ஒவ்வாமை காரணமாக மரணத்தை எதிர்கொண்டு வெற்றிகண்ட நடாஷா அன்று மரணத்திற்கு தன்னை ஒப்படைத்துள்ளதாக அவர் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.