திருநெல்வேலி மாவட்டத்தில் கணவர் இல்லாமல் தனியாக வசித்து வந்த பெண்ணின் மீது ஆசை கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரசேகர் என்பவர் கத்தார் நாட்டில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது இளம் மனைவி சங்கரேஸ்வரி, அந்தப் பகுதியில் தன்னுடைய ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.
சங்கரேஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி, செல்போன் மூலம் தொடர்ந்து பேசி சங்கரேஷ்வரியுடன் நட்பை வளர்த்துள்ளார்.
இந்த பழக்கம், வெளிநாட்டிலிருக்கும் தனது கணவனுக்கு தெரிந்துவிடுமோ என பயம் கொண்டுள்ளார் சங்கரேஸ்வரி. இதனால், கருப்பசாமியின் தொடர்பை துண்டித்துள்ளார். போன் வாயிலாக தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்தி தொல்லை கொடுத்த கருப்பசாமியின் அழைப்பையும் துண்டித்திருக்கிறார்.
அதனால் வெறியான கருப்பசாமி, நேரிலேயே சங்கரேஸ்வரிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சங்கரேஸ்வரியுடம் சென்று, தனது ஆகைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதில், இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதில் கோபம் கொண்ட கருப்பசாமி அங்கிருக்கும் கட்டையை எடுத்து, சங்கரேஸ்வரியை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே இறந்துள்ளார்.
சங்கரேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை மேற் கொண்டவர் தப்பிய கருப்பசாமியை தேடப்பட்டு வந்த நிலையில், இதற்கு பயந்த கருப்பசாமி விவசாயப் பயிருக்குத் தெளிக்கப்படும் குருனை மருந்தினை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
கருப்பசாமியை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.இந்த மூர்க்கத் தனத்தை நடத்திய கருப்பசாமிக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்.