
வெளிநாட்டில் தான் இருக்கும் போது உள்ளூரில் தனது மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதாக கணவர் கண்ணீர்விட்ட நிலையில் அதற்கு மனைவி கொடுத்த விளக்கம் பொலிசாரை தலைசுற்ற வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ்குமார் (39) என்ற நபர் நேற்று நாகர்கோவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனக்கும் ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நான் 2017ல் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்ற நிலையில் ப்ரீத்திக்கு அகில் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் ஊருக்கு வந்த என்னையும், என் 2 குழந்தைகளையும் வேண்டாம் என்று கூறி விட்டு அகிலுடன் சென்றுவிட்டார். இதோடு என் மனைவியின் உண்மையான பெயர் பிரீத்தி, ஆனால் என்னிடம், சிந்து என பொய் சொல்லி உள்ளார்.
மேலும் திருமணத்தின்போது அவருக்கு 17 வயது, ஆனால் 22 வயது என்று கூறி எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.
நான் வெளிநாட்டில் இருந்தபோது என் மனைவியும், மற்றொரு வாலிபரும் நி ர்வாண நிலையில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிகிறது.
பிரீத்தியும், அகிலும் சேர்ந்து என்னை கொ லை செய்துவிடுவதாக மி ரட்டுகிறார்கள். எனவே முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த என் மனைவி, 2-வது கணவர், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் மற்றும் என் மனைவியுடன் பழகிய இன்னொரு வாலிபர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பொலிசார் ப்ரீத்தியிடம் விசாரித்த போது என் தாயார் பெயர் சிந்து ஆகும். எனக்கு 17 வயதிலேயே அவர் திருமணம் செய்து வைத்து விட்டார். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. நானும், என் தாயாரும் பார்ப்பதற்கு அக்காள், தங்கை போல இருப்போம்.
எனவே என் தாயார் அவரது பிறப்பு சான்றிதழை காண்பித்து என்னை ரமேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்
ஆவணப்படி ரமேஷ்குமார் திருமணம் செய்தது தனது தாயை என்று கூறி பொலிசாரை தலைசுற்ற வைத்தார்.
இதையடுத்து ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் பொலிசாரும் செய்வதறியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.