வெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்….உள்ளூரில் வேறு பெண் : விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி!!

1049

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சிங்கப்பூரில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், சிங்கப்பூரில் துர்கா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மனைவி துர்கா தேவி, திருமணத்தை நிறுத்துவதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார்.

இன்று நடைபெறவிருந்த ராஜ்குமாரின் இரண்டாவது திருமணத்தை தடுத்த நிறுத்த கோரி துர்காதேவி பொலிசாருடன் மண்டபத்திற்கு சென்றார். ஆனால் 3 நாட்களுக்கு முன்பே ராஜ்குமாருக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் துர்கா தேவி.