வெளிநாட்டு ஆணுடன் டேட்டிங் ஏன்? நடிகை இலியானா விளக்கம்!!

637

நடிகை இலியானா தனது அவுஸ்திரேலிய காதலன் ஆண்ட்ரு நீபோன் உடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர்.

முக்கிய இடங்களுக்கு செல்லும்போது ஆண்ட்ருவுடன் ஜோடிபோட்டு செல்கிறார். சமீபத்தில் ஆண்ட்ரு பிறந்த நாளில் அவருக்கு இணைய தள பக்கம் மூலம் மெசேஜ் அனுப்பினார்.

அதில் இலியானா கூறியதாவது: எனது காதலன் ஆண்ட்ருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதேபோன்று எல்லா வருடமும் சிறந்த வருடமாக உனக்கு அமையட்டும். எல்லாவிதமான சந்தோஷத்துக்கும் நீ தகுதியானவன் என வாழ்த்தியுள்ளார்.

மேலும், தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்ற வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் எதற்காக நீங்கள் வெளிநாட்டு நபரை காதலனாக தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, பதிலளித்துள்ள இலியானா, நான் அவரின் இதயம் மீது தான் காதலில் விழுந்தேன். அவரின் நிறம், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது பற்றி கவலை இல்லை என கூறியுள்ளார்.