வெளிநாட்டு இளைஞர் சொன்னதை நம்பி அவரை மணந்த இளம்பெண் : திருமணமான 8 நாளில் வெளியான உண்மை!!

1428

வெளியான உண்மை

ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த அழகிய இளம் பெண் சீனாவை சேர்ந்த இளைஞர் பெரும் பணக்காரர் என நம்பி அவரை மணந்த நிலையில் அவர் ஏழை என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் ரபியா கன்வால் (22). அழகிய இளம்பெண்ணான இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவராவார். இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜங் சுச்சன் என்ற இளைஞர் சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு வந்தபோது ரபியாவை சந்தித்தார்.

இருவரும் நட்பான நிலையில் பின்னர் அது காதலாக மாறியது.
தான் சீனாவில் பெரும் பணக்காரர் என்று, பெரியளவில் விவசாயம் செய்து வருவதாகவும் ரபியாவிடம் ஜங் கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்தார் ரபியா. இதன்பின்னர் இருவருக்கும் பாகிஸ்தானிலேயே திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த 8வது நாள் ரபியாவை ஜங் சீனாவுக்கு அழைத்து சென்றார். அங்கு தான் ரபியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் ஜங் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த விவசாயி என்பது அவருக்கு தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த ரபியா சீனாவின் உள்ள பாகிஸ்தான் தூதரகம் உதவியுடன் பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து கணவர் ஜங்கை விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.