வேறு வழியில்லாமல் அட்லீ கையில் எடுத்த விஜய் படம்.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2 கன்ஃபார்ம்..!

279

அட்லீ கையில் எடுத்த விஜய் படம்….

விஜய்யின் சினிமா கேரியரில் அட்லீக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பது இருவரது கூட்டணியில் வெளிவந்த வெற்றி படங்களே சான்று. வியாபாரம் கோடிகளிலும் வருமானம் 100 கோடிகளிலும் வந்தால் கசக்குமா.

விஜய் அட்லீ இயக்கத்தில் முதல் முறையாக உருவான படம் தெறி. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் கெட்டப்புகளை மூன்று விதமாக மாற்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

பழைய கதையாக இருந்தாலும் படமாக்கும் விதத்தில் மாஸ் காட்டியிருந்தார் அட்லீ. அதனைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என 250 கோடி 300 கோடி வசூல் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வந்துவிட்டார்.

ஆனால் அவர் மீது தயாரிப்பாளர்கள் வைக்கும் ஒரே குற்றம் தேவையில்லாமல் செலவு வைக்கிறார் என்பதுதான். அதுமட்டுமில்லாமல் எங்கு சென்றாலும் தன்னுடைய மனைவியையும் தயாரிப்பாளர் செலவில் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றினால் யாருக்குத்தான் கோபம் வராது.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் அட்லீயை வைத்து படம் இயக்க ரெடியாக இல்லை என்பதுதான் தற்போதைய கருத்தாக உள்ளது. இருந்தாலும் சாருக்கான் படம் கைவிட்டதால் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணுவே தன்னுடைய வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் இடையில் முருகதாசுக்கு வாய்ப்பு கொடுத்ததைப் போல அடுத்த படத்தில் அட்லீக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.