வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்!

793

நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகள் ஆரத்யா பச்சனுடன் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.இந்த பயணத்தில் ஈஃபில் டவர், டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தன் மகளுடன் சென்றுள்ளார்.

இந்த சுற்றுலாவின் போது தன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். டிஸ்னிலேண்ட்டில் உள்ள ரோலர் கோஸ்டரில் ஆரத்யாவுடன் ஐஸ்வர்யாவும் அமர்ந்து உற்சாகமாகச் செல்லும் காட்சி வைரலாகியுள்ளது.

பட வேலைகள் இடையிலும் ஆரத்யாவுடன் நேரம் செலவிடுவதை தவிர்க்கவில்லை, ஐஸ்வர்யா ஒரு சூப்பர் அம்மா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.