போலந்து நாட்டில்………
போலந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
போலந்தில் உள்ள வார்சா மாகாணத்தில் ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள டீப்ஸ்பாட் (DeepSpot) என்று பெயரிட்டுள்ள நீச்சல் குளம் இலங்கை மதிப்பில் 25 மில்லியன் டொலர் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்நீச்சல் குளம் வரும் 14ம் திகதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நீச்சல் குளமானது உலகின் அனைத்து பிரிவினைரையும் கவரக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்திற்குள் செயற்கையான குகைகளையும், மாயன் காலத்து சிற்பங்களையும் அமைத்துள்ளனர். சுற்றுலா வரும் பார்வையாளர்களுக்காக நீருக்கடியில் சுரங்கப்பாதையையும், ஐந்து மீட்டர் ஆழத்தில் நீச்சல் குளத்தை இரசிப்பதற்காக ஓய்வறையையும் கட்டியுள்ளனர்.
இது ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக கட்டப்பட்ட பிரத்யேகமான நீச்சல் குளமாய் இருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.