Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில் கொரோனா.. உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,108 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலும், அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக நியூயோர்க் விளங்குகிறது. அங்கு மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா...
டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண்.. டிக்டாக் வீடியோ என்றாலே நெகடிவ்வாக நினைக்கும் நிலையில், அந்த டிக்டாக்கால் தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணவுப்பூர்வமான நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடாக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் 18 வயதான பவித்ரா ஆரபவி. இவரது தாயார் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்து வந்துள்ளார். மருத்துவர்கள் டயாலிசிஸை பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு, தினமும் நான்கு விதமான மாத்திரகளைக்...
விஸ்வசாந்தி.. வாடகை வீட்டில் வசித்து வந்த சீரியல் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஹைதராபாத் எல்லாரெட்டிகுடா என்ற பகுதியில் உள்ள காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து எஸ்.ஆர்.நகர் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர். விஸ்வசாந்தியின்...
ஒரே குடும்பத்தில்.. இந்திய மாநிலம் பீகாரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்.16 ஆம் திகதி சிவான் மாவட்டத்தில்...
மனைவியை காப்பாற்ற.. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் வலியால் துடித்த மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவரின் செயல் மனதை உருக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரின் மனைவி மஞ்சுளா....
ஓர் நெகிழ்ச்சி சம்பவம்.. 1400 கிலோமீற்றர் கடந்து தாய் ஒருவர் மகனை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில், மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற இயலாமல் அங்காங்கே அவதியுற்று வருகின்றனர். இவ்வாறு மாட்டிக்கொண்ட பலர், நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், ஒரு தாய் மகனுக்காக 1400கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கடந்து அவரை...
காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர்.. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது. போபாலில் அமைந்துள்ள ஜே.பி.மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் சச்சின் நாயக். இவரே பணி முடித்து வீடு திரும்பாமல் காரில் தங்கி வருபவர். தான் வீட்டுக்குச் சென்றால் கொரோனா வைரஸ் தன் மனைவியையும் குழந்தையையும் பாதித்துவிடுமோ என்ற அச்சமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். மருத்துவமனை...
துபாயில்.. துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்களின் தொழில் கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் ஊருக்கே திரும்பலாம் என கிளம்பிய போது பெரும் கோடீஸ்வர்ர்களாக மாறியுள்ளனர். கேரளாவை சேர்ந்த Jijesh Corothan, Shah Jahan Kuttikattil, Shanoj Balakrishnan ஆகிய மூவரும் துபாயில் தங்கி கார் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடனுக்கு மூவரும் சேர்ந்து சொகுசு காரை வாங்கி சில நாட்களாக ஓட்டி வந்தார்கள். இந்த சூழலில் கொரோனா அச்சத்தால் துபாயில்...
கொரோனாவுக்கு.. பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மகள், மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. வார்விக்ஷயர் பகுதியில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிரியார் உட்பட அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவரது உதவிக்குன் விரைந்துள்ளனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மறதி நோயால் அவதிப்பட்டு வந்துள்ள 63 வயது ஜூலி மர்பி கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சையில் இருந்து வங்துள்ளார். இந்த நிலையில் அவரது நிலை மோசமடையவே, சிகிச்சை...
சிறுமி.. மெக்ஸிகோ நாட்டில் ஊரடங்கு காரணமாக குடியிருப்பில் தனித்திருந்த 13 வயது சிறுமியை நபர் ஒருவர் வீடு புகுந்து கொ லை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நோகலேஸ் நகரில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் படுக்கை அறையில் 13 வயதேயான அன்னா பவுலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொரோனா பரவலை அடுத்து குடியிருப்பில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடுகளால், சம்பவத்தன்று அன்னாவின் தாயார் உணவு பண்டம் வாங்க...